×

#BREAKING : போகி திருநாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மிகப்பெரிய மாற்றம்..!! 

 

வரலாற்றில் இல்லாத அளவாக தங்கம் விலை உயர்ந்து இருக்கிறது. இதனால் புது ஆண்டு பிறந்ததில் இருந்தாவது தங்கம் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், நடப்பு ஆண்டிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. 

நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,170க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,92,000க்கும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.292க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று (ஜன. 14) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280க்கும், ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை வரலாறு காணாத வகையில், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.307க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து ரூ.3,07,000க்கும் விற்பனையாகிறது.