×

#BREAKING : கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது!

 

சர்வதேச அளவில் நிலவிய கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், கச்சா எண்ணெய் விநியோகம் சற்று சீரான நிலையில், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்து ரூ.3,106க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.957.50க்கு விற்கப்படுகிறது.