#BREAKING : முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவி சென்னம்மா காலமானார்..!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவி சென்னம்மா, 87. கடந்த இரண்டு நாட்களாக சுவாச பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததால், பெங்களூரு வீட்டில் ஓய்வில் இருந்தார்.கடந்த ஜூலை 15 இரவு 10:00 மணிக்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, எச்.ஏ.எல்., சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் மனைவியான சென்னம்மா, இன்று (ஜூலை.18) காலமானார். சுவாசக் கோளாறு காரணமாக மணிப்பால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் அவர் உயிர் பிரிந்தது.
சென்னம்மா மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
HD Deve Gowda's Wife Chennamma Passed Away : ಉಸಿರು ನಿಲ್ಲಿಸಿದ ದೇವೇಗೌಡರ ಪತ್ನಿ ಚೆನ್ನಮ್ಮ | HD Devegowda Wife Chennamma
— Republic Kannada (@KannadaRepublic) July 18, 2026
WATCH #RepublicKannada LIVE: https://t.co/hNIigZLnqy#chennammadevegowda #chennamma #chennammapassedaway #hddevegowda #hddevegowdafamily #hdkumaraswamy… pic.twitter.com/UMApXYjX1c
null