#BREAKING : முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் காலமானார்..!!
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.எஸ்.கர்ணன் (71) உடல்நலக்குறைவால் இன்று (நவ.13) காலமானார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கர்நாதம் கிராமத்தில் 1955-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி சின்னச்சாமி சுவாமிநாதன் கர்ணன் பிறந்தார். சென்னை புதுக்கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் (பி.எல்) படிப்பையும் முடித்து 1983-இல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.
2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, 2017-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
சக நீதிபதிகள் மீது ஊழல் புகார்கள் கூறியது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மே 2017-இல் உச்சநீதிமன்றத்தால் இவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய நீதித்துறை வரலாற்றில் பதவியில் இருக்கும்போதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முதல் உயர்நீதிமன்ற நீதிபதி இவராவார்.
நீதித்துறையில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்ட இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி தனது நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.