×

#BREAKING : சென்னை வடபழனியில் பிரபல ஃபோரம் மாலில் தீ விபத்து..! அலறியடித்து ஓடிய மக்கள்..!

 

சென்னை வடபழனியில் பகுதியில் உள்ளது ஃபோரம் மால். இங்கு உணவகங்ள், தியேட்டர்கள் உள்ளிட்ட பல கடைகள்  செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் ஃபோரம் மாலில் கீழ்த்தளத்தில் உள்ள உணவகத்தில் திடீரென தீ பற்றியது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரியப்பட்டது.

 

அவர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருபக்கம் ஃபோரம் மாலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றிவிட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டிருக்கிறது..