#BREAKING : பிரபல WWE மல்யுத்த வீரர் பிரான்சன் ரீட் காலமானார்!
பிரபல WWE மல்யுத்த வீரர் பிரான்சன் ரீட் காலமானார்.
ஜெர்மைன் ஹேலி (Jermaine Haley) என்ற இயற்பெயர் கொண்ட இவர், 38 வயதில் உடல்நலக் குறைபாடுகள் (Medical complications) காரணமாக உயிரிழந்ததாக WWE நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற Crown Jewel போட்டியின்போது ஏற்பட்ட காயங்களைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உயிரிழப்புக்கான காயங்களுடனான தொடர்பு குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை
WWE வெளியிட்ட அந்த அறிக்கையில், "பிரான்சன் ரீட் என்றழைக்கப்படும் ஜெர்மைன் ஹேலி, உடல்நலக் குறைபாடுகள் காரணமாக இன்று தனது 38-வது வயதில் காலமானார் என்பதை அறிவிக்க WWE மிகவும் வருந்துகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "ஜெர்மைன் WWE களத்தில் ஒரு பிரம்மாண்டமான ஆளுமையாக இருந்தார். ஆனால் அதைவிட முக்கியமாக, அவர் ஒரு அற்புதமான மனிதர், குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் மற்றும் சக ஊழியர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர்" எனப் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
"ஜெர்மைனின் கர்ப்பிணி மனைவி பெய்க் (Paige), அவர்களது மகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினர், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றும் WWE தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.