×

#BREAKING : தூத்துக்குடி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!

 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அருணாச்சலபுரத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 

நல்வாய்ப்பாக பணியாளர்கள் யாரும் அங்கே இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.