×

#BREAKING : மகளிருக்கு மாதம் ரூ.2000- தேர்தல் வாக்குறுதி அளித்த இபிஎஸ்..!
 

 

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

* வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி வீடு கட்டி தரப்படும்.

* 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150நாட்களாக உயர்த்தப்படும்.

* மகளிர் நலன் குலவிளக்கு திட்டத்தின் மூலம் மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்.

* ரேசன் அட்டையில் உள்ள குடும்பப்பெண்களின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ரூ.2000 செலுத்தப்படும்.

* ஆண்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* 5 லட்சம் மகளிருக்கு ரூ.25,000 மானியத்தில் அம்மா இரு சக்கர வாகன திட்டம்.

மேலும் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதி அறிவிக்கும் போது பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார்.