×

#BREAKING : பண்ணை வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட முட்டை விலை..!!

 

நாமக்கல் கோழிப்பண்ணைகள் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் முட்டை விலையும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாமக்கல் கோழிப் பண்ணை வரலாற்றில் முதன்முறையாக முட்டை கொள்முதல் விலை ₹6.20 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ₹6.15-ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சில்லறை விலையில் 1 முட்டை ₹8 வரை விற்க வாய்ப்புள்ளது.