#BREAKING : சீட் வேண்டாம்.. அப்பாவுக்கே கொடுங்கள்! ராணிப்பேட்டை தொகுதியில் மீண்டும் அமைச்சர் காந்தியே போட்டிட்டியிடுகிறார்..!
ராணிப்பேட்டை சிட்டிங் எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான காந்திக்கு, தேர்தலில் போட்டியிட, தி.மு.க., தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக மகன் வினோத் காந்தி, தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், காந்தி கடும் அதிருப்தியடைந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டமும் நடத்தப்படாமல் இருந்தது.
`வினோத் காந்தியை வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று உடன்பிறப்புகள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினார்கள். இந்நிலையில், தன் மகனுக்கு சீட் வேண்டாம். மீண்டும் தனக்கே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் காந்தி, திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.தற்போது திமுக தலைமை குழப்பத்தில் உள்ளது. மீண்டும் அமைச்சர் காந்திக்கு சீட் வழங்குவதா? இல்லாவிட்டால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அவரது மகன் வினோத் காந்தியையே களமிறக்குவதா? என்று திமுக தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள். இந்தச் சூழலில் யார் மனு தாக்கல் செய்வார்கள் என்ற குழப்பம் இருந்து வந்த நிலையில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதில் தந்தை உறுதியாக இருப்பதால் விட்டுக் கொடுக்கிறேன் என அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி அறிவித்துள்ளார். இதனால் இன்று அமைச்சர் காந்தி வேட்பாளராக மனுதாக்கல் செய்வர் என்ன எதிர்பார்க்கப்படுகிறது.