#BREAKING : திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு..!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் (ஜூலை 18) திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஆவேசமாக பேசினார். சட்டமன்றத்தை கூட்டினால் முதலமைச்சர் விஜய்யின் எலும்புகளை உடைப்போம் என பகிரங்கமாக மார்க்கண்டேயன் எம்எல்ஏ மிரட்டல் விடுத்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பெரும் விமர்சனத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
அதிரடி கைது
இதன் தொடர்ச்சியாக, எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் நேற்று இரவு புகார் அளித்திருந்தார்.
இதன்பேரில், இன்று (ஜூலை 20) அதிகாலையிலேயே எம்எல்ஏ மார்க்கண்டேயனின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசிய வழக்கில் கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு.
MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் சுமதி உத்தரவு