#BREAKING : முதல்வர் விஜயின் பதிலுரைக்கு திமுக உறுப்பினர்கள் கடும் அமளி.
சட்டமன்றத்தில் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து முதல்வர் விஜய் ஆவேசமாக பேசினார். முதல்வர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது எழுந்து நின்று திமுகவினர் முழக்கமிட்டனர். எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று கே. என். நேரு உள்ளிட்ட மூத்த திமுக உறுப்பினர் தங்களுக்குள் ஆலோசனை செய்தனர்.
திமுக எதை செய்தாலும் குடும்பமாக சேர்ந்துதான் செய்வார்கள் போல.கடந்த ஆட்சியில் பார்ட்டி ஃபண்ட் வாங்கியதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. 7.5% முதல் 10% வரை பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது
பார்ட்டி ஃபண்ட் வாங்கியதில் முக்கிய நபர்கள் ஸ்டாலின், உதயநிதிதான் என அமலாக்கத் துறை கூறியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என அமலாக்கத் துறை கூறியது.
சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய், கடந்த கால திமுக அரசின் மீதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆவேசமாக உரையாற்றினார்.
முதல்வரின் இந்த பேச்சால் அதிர்ச்சியடைந்த திமுக உறுப்பினர்கள் உடனடியாக எழுந்து நின்று பலத்த முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, அவையில் முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வாறு உடனடியாக பதிலடி கொடுப்பது என்பது குறித்து கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த திமுக உறுப்பினர்கள் தங்களுக்குள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.