×

#BREAKING : திமுகவினர் ஷாக்..!! கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள தவாக தனித்து போட்டியிட முடிவு..!!

 

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி வேல்முருகன் பேசியதாவது , 

நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கேட்டு திமுகவின் பேச்சுவார்த்தை குழுவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தோம்.

ஆனால், இப்போது வரை கூடுதல் இடங்கள் பற்றி தகவல் கிடைக்கபெறவில்லை. இதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்'' என சில தினங்களுக்கு முன் கூறினார்.

இதனால் திமுக கூட்டணியில் முதல் விக்கெட்டாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுகிறதா? என்ற கேள்வி எழுந்தது. 

இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள தவாக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது.

அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.