#BREAKING : தபால் வாக்கு நிலவரம் - திமுக 17, அதிமுக 4. தவெக 3
Updated: May 4, 2026, 08:33 IST
தபால் வாக்குகள் எண்ணிக்கை வெளியாகி வந்த வண்ணம் உள்ளது.
234 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
- சேப்பாக்கம் தொகுதி - 48 வாக்குகள் பெற்று உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
- எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை
- பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 75 தபால் வாக்குகள் பெற்று முன்னிலை.திமுக பெரம்பூரில் 25 வாக்குகள் பெற்றுள்ளது.திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பின்னடைவு
- துறைமுகம் தொகுதியில் சேகர் பாபு தபால் வாக்குகளில் முன்னிலையில் இருக்கிறார்
- சேலம் வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜேந்திர முன்னிலையில் இருக்கிறார்
- ராயபுரம் தொகுதியில் தவெக முன்னிலை
- காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக முன்னிலை
- திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேருவிற்கு பின்னடைவு.292 வாக்குகள் பின்னடைவு
- மதுரை மேற்கு தொகுதியில் திமுக முன்னிலை
- ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி முன்னிலை
- ஆலந்தூரில் திமுக முன்னிலை
- கோவை தெற்கு தொகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை
- ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் நாசர் முன்னிலை