#BREAKING :திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் ஒரு சீட்..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -எ.சுதீஷ் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது
கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதை பிரேமலதா உறுதி செய்தார். அப்போதே, தொகுதி பங்கீட்டு பேச்சில் 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும், தே.மு.தி.க., தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ஆறு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் வழங்க தி.மு.க., முன்வந்துள்ளதாக கூறப்பட்டது.இந்நிலையில், இன்று திமுக தேமுதிக இடையே ராஜ்யசபா சீட் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. திமுக சார்பில் டிஆர்பாலு, ஆர்எஸ்பாரதி, திருச்சி சிவா ஆகியோரும், தேமுதிக சார்பில் சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா பதவியை வழங்குவது குறித்த ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இரு கட்சிகள் இடையே கையெழுத்தானது.
ராஜ்யசபா தேர்தல் 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நாளை மறுதினம்( மார்ச் 05) முடிவடைகிறது.
தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 இடங்களில் திமுக 4, அதிமுக 2 இடங்களில் வெற்றி பெற முடியும்.