#BREAKING : இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கடைசி புகைப்படம்..!
தமிழ் சினிமாவையே தன்னுடைய சுவாசமாக மூச்சு காற்றாக சுவாசிக்கும் சிங்க தமிழன்.தமிழ் சினிமாவின் மிக பெரிய பொக்கிஷங்களில் ஒருவர் தான் இயக்குநர் இமயம் பாரதிராஜா. ஸ்டுடியோ உள்ளேயே முடங்கி போன கேமராவையும் சினிமாவையும் கிராமத்து வாசம் வீசும் வயல்வெளிக்கு படையெடுக்க வைத்து படமெடுக்க வைத்து மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர். இன்று இருக்கும் பெரும்பாலான இயக்குநர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழ்ந்த தமிழ் மண்ணின் மைந்தன் பாரதிராஜா.
இவருக்கு மனோஜ் ஜனனி இரு பிள்ளைகள் பிறந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி உடல்நலக் குறைவால் மகன் மனோஜ் காலமானார். இவரது மறைவை தொடர்ந்து பாரதிராஜா உடல் நிலை பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரதிராஜாவின் பூத உடலின் புகைப்படம் சற்று முன் வெளியாகியது. இதை பார்த்த அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.