#BREAKING : இயக்குனர் சேரனின் தாயார் காலமானார்..!
Updated: May 25, 2026, 14:05 IST
தமிழில் பிரபல இயக்குநராக இருக்கும் சேரன், ‘பாரதி கண்ணம்மா’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி, ‘ஆட்டோகிராஃப்’, ‘தவமாய் தவமிருந்து’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சேரன் அவர்களின் தாயார் கமலா பாண்டியன் சற்று முன் உயிரிழந்தார். அவருக்கு வயது 84. வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது திடீர் மரணம் சேரன் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட சேரனின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கமலா பாண்டியனின் இறுதிச் சடங்குகள் நாளை, சேரனின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பாளையூர்பட்டியில் நடைபெற உள்ளது.