#BREAKING : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்..!
சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். காலை 11 -12 மணிக்குள் சேப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2 வது முறையாக போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்
தமிழக சட்டமன்ற தொகுதிகளின் வரிசையின் பட்டியலில் சேப்பாக்கம் தொகுதி 19வது இடத்தில் உள்ளது. இது சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இரண்டு தனி தனி தொகுதிகள் இணைக்கப்பட்டு புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது. இந்தியாவின் மிக நீளமான கடற்கரையான மெரினா கடற்கரைக்கும் இந்த தொகுதிக்குள் வருகிறது.அது மட்டுமின்றி எம்.ஏ .சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், சென்னை பல்கலைக்கழகம், எழிலகம் ,பார்த்தசாரதி பெருமாள் கோவில், பெரிய மசூதி பாரம்பரியமான மேன்ஷன்கள் ,சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை, புதுப்பேட்டை வாகன உதிரிபாகன கடைகள் போன்றவை சென்னையில் முக்கிய இடங்கள் அனைத்தும் இங்கு உள்ளது.
சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி
- சேப்பாக்கம் தொகுதி நீண்ட காலமாக திமுகவின் பலம் வாய்ந்த பகுதியாக பார்க்கப்படுகிறது.
- 1977 மற்றும் 1980 1984 ஆகிய தேர்தலில் திமுக வேட்பாளர் ரகுமான்கான் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றார்.
- 1991இல் காங்கிரஸ் வேட்பாளர் ஜீனத் சர்புதீன் வெற்றி பெற்றார். அதன் பிறகு 96, 2001 ,2006 ஆகிய தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வெற்றி பெற்றார்.
- இதனை தொடர்ந்து 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தலில் திமுகவின் ஜெ அன்பழகன் வெற்றி பெற்றார்.
- இந்த சூழலில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
அப்போது 93 ஆயிரத்து 285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் இந்த முறை, நடைபெறும் தேர்தலிலும் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் போட்டுயிடுகிறார். அவருக்கு எதிராக அதிமுக சார்பில் ராஜாராம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆயிஷா பேகம், தமிழக வெற்றி கழகம் சார்பில் டி. செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.