×

#BREAKING : சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்..! IPL தொடரிலிருந்து கலீல் விலகல்..!

 

சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள போட்டிகள் அனைத்திலும் இடம்பெற்றிருந்த கலீல் அகமது, KKR அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனது வலது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இது 'கிரேடு 2' (Grade 2) வகையைச் சேர்ந்த தசை கிழிவு ஆகும். இதற்கான சிகிச்சைக்குக் குறைந்தது 10 முதல் 12 வாரங்கள் வரை ஆகும்" என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடைத் தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார் கலீல் அகமது.

இத்தொடரின் ஆரம்பத்தில் இருந்து CSK அணிக்காகத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வீரர்களில் இவரும் ஒருவர். இவரை சென்னை அணி நிர்வாகம் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.