×

#BREAKING : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!  பெரம்பூரில் விஜய்க்கு 75 தபால் ஓட்டுகள்..!

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, மாநில அளவில் மொத்தம் 62 மையங்களில் தபால் வாக்குகள் எண்ணிக்கையுடன் தொடங்கியது. முதல் கட்டமாக பெரம்பூர் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுளளது.பெரம்பூரில் விஜய்க்கு 75 ஆர்.டி.சேகருக்கு 25 தபால் ஓட்டுகள் கிடைத்துள்ளன.  சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 21 தபால் வாக்குகள் பெற்று முன்னிலை 

தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறுகிறது?

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் படியாக தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பிறகு, மின்னணு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இவை முடிந்தவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டு, சில நிமிடங்களிலேயே ஆரம்பகட்டப் போக்குகள் வெளிப்படத் தொடங்கும். வாக்கு எண்ணும் பணியாளர்கள், தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வேட்பாளர் முகவர்கள் ஆகியோருக்கு மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி உண்டு. வேறு யாரும் உள்ளே நுழைய முடியாது. 

மேலும், அலுவல் பணியில் இருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் மொபைல்போன் அனுமதிக்கப்படாது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும் வரை பயிற்சி முகவர்கள் உள்ளேயே இருக்க வேண்டும். ஏதேனும் தவறு நடந்திருப்பதாக எந்தவொரு முகவருக்கும் சந்தேகம் ஏற்பட்டால், அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே அவர் மறுவாக்கு எண்ணிக்கைக்குக் கோரிக்கை விடுக்கலாம்.

தேர்தல் அதிகாரி ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளை முடிவுத் தாளில் பதிவுசெய்து, வெற்றியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அவருக்கு வெற்றிச் சான்றிதழை வழங்குகிறார். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறைக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றன. விதிகளின்படி, வாக்கு எண்ணிக்கை நாளிலிருந்து 45 நாட்களுக்கு அவை அங்கேயே பாதுகாக்கப்படும்.