#BREAKING : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்..!
Feb 25, 2026, 14:13 IST
சுதந்திர போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 15 நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நல்லகண்ணுவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து நேற்று மாலை முதல் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் காலமானார்