#BREAKING : முந்தைய அரசின் முக்கிய மக்கள் நல திட்டங்கள் தொடரும் - முதல்வர் விஜய்..!
May 13, 2026, 11:41 IST
நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர்,
முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று உறுதி அளிக்கிறேன் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல என நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.
கொள்கை தலைவர்களின் எண்ணங்களின் அடிப்படையில் எங்களது அரசு தொடரும்.
தேமுதிக உறுப்பினர் பிரேமலதா முன் வைத்த கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும்.
இதை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.