☰
×

#BREAKING : இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி..! 

 

இசையமைப்பாளர் தேவா உடல், சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் தேவா இன்று சென்னையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல், தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவா உடல் நாளை நண்பகல் ஒரு மணிக்கு சென்னையில் இருந்து சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டிற்கு இறுதிச்சடங்கிற்காக கொண்டு செல்லப்படுகிறது.


இசையமைப்பாளர் தேவா இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் அவரது இறுதி சடங்கிற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


இந்நிலையில், தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் விஜய். 

தேவா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி https://t.co/KDFqbQsn6Z

— Peter (@TrendvbAk) October 17, 2026