☰
×

#BREAKING : தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்..! 

 

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையில் தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் த.வெ.க. சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று மதுரையில் முறைப்படி தொடங்கி வைக்கிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக மதுரைக்கு வருகை தருவதால், அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திட்டத்தின் முதற்கட்டமாக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 107 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மோதிரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருத்துவமனையிலும் நாள்தோறும் 100 குழந்தைகளுக்கு வீதம் இவை வழங்கப்பட உள்ளன. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட இருக்கின்றன. எனினும், இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து, மாநிலத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

 மதுரை மாவட்டத்தின் பிற அரசு மருத்துவமனைகளில் பிறந்த 25 குழந்தைகளுக்குத் தன் கரங்களால் மோதிரங்களை வழங்குகிறார். தொடர்ந்து, பிரசவ வார்டிற்கு நேரில் சென்று அங்கிருக்கும் 10 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்து, கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களின் நலனை விசாாிக்க உள்ளார். 

மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனை பணிகளுக்கு எந்தத் தடையும் ஏற்படாது. மருத்துவமனைக்குள் 80 பேருக்கு மட்டுமே அனுமதி, அதில் பயனாளிகள் 25 பேர் உள்ளனர். மருத்துவமனைக்கோ நோயாளிகளுக்கோ எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். 

இந்நிலையில் சற்றுமுன் தமிழக முதல்வர் விஜய் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைத்தார். 

தமிழக அரசின் திட்டமான ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை’ முதல்வர் விஜய் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முறைப்படி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக அங்குப் பிறந்த 30 பச்சிளங்குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரங்களை அவர் நேரில் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/rVsQ6JzIsF4?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/rVsQ6JzIsF4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">