×

#BREAKING : வரலாற்றில் முதல்முறை ... மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்..!!

 

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு அணையில் நீர் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது. அதனையடுத்து, காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரில் அளவு அதிகரித்து.

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த 4ஆம் தேதி முதல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியாக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணையில் இருந்து திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று (செப்.1) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.

அதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்கு செல்கிறார். விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் அவரை வரவேற்றனர். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் உடனிருந்தார்.

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இன்று முதல் 45 நாட்களுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் 12 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

#PolimerNewsLIVE || சற்றுநேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய் https://t.co/CLaw7yEiE8

— Polimer News (@polimernews) September 1, 2026