#BREAKING: கள்ளச்சாரயத்தை ஒழிக்க தனிப்படை அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா..!!
கல்வராயன் மலை பகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது,
கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
இந்த தனிப்படை மூலம் கள்ளச்சாராய தயாரிப்பு மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்கள் இரும்புக்கரம் கொண்டு முழுமையாக ஒழிக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
கல்வராயன் மலையில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மதுப்பழக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரியது எனக் குறிப்பிட்ட அவர், போதை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே முதலமைச்சரின் முதன்மை நோக்கம் என்று தெரிவித்தார்.
இளைஞர்கள் மத்தியில் போதை கலாச்சாரத்தைத் தடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் ஒரு பகுதியாக, கல்வராயன் மலையில் 5 ஏக்கர் பரப்பளவில் நவீன விளையாட்டுப் பயிற்சி மைதானம் மற்றும் பயிற்சி பெறும் மாணவர்களுக்கான தங்கும் விடுதி அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
இளைஞர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினாலே போதைப்பொருள் பழக்கம் தானாகவே குறைந்துவிடும் என்று குறிப்பிட்ட அவர், விளையாட்டுத் துறை மூலமாக இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கான பணிகளை விரைந்து முடித்து, அந்தப் பகுதி இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் பேசினார்.