×

#BREAKING : சென்னையில் ரூ 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!

 

புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அவர்,

நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் 20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்...


தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிருவாக வளாகம் உருவாக்கப்படும்.

போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிருவாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்.