×

#BREAKING : சிறுமிகளுக்கு இலவசமாக (HPV) தடுப்பூசி செலுத்தும் திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

 

இந்தியாவில் முதல்முறையாக சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் (HPV) தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தனியார் மருத்துவமனைகளில் இந்த ஊசிக்கு ரூ.28,000 செலவாகும் நிலையில் அரசு சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட 3.38 லட்சம் சிறுமிகளுக்கு இலவசமாக செலுத்தப்படுகிறது.

 

இளம்பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு என்பது உலகளவில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் என்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

 

14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புகளை முன்கூட்டியே தடுப்பதற்கு HPV (Human papilloma Virus) தடுப்பூசியினை செலுத்துவதன் மூலம் இதனை தடுக்க இயலும் என்று உலக சுகாதார அமைப்புகள் கூறியுள்ளது. இதனால் இந்தியாவிலேயே முதன்முறையாக HPV தடுப்பூசி இலவசமாக வழங்கிட, சட்டமன்றத்தில் 2025 மார்ச் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.