×

#BREAKING : டாடா குழும தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா..!

 

டாடா குழும தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ளார். டாடா குழும தலைவராக கடந்த 2017 முதல் பதவி வகித்து வந்த அவர், திடீரென ராஜினாமா செய்துள்ளார். வரும் 2027 பிப்ரவரியுடன் சந்திரசேகரின் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில், பணி நீட்டிப்பு வழங்க நிர்வாகக்குழு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனிடையே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

டாடா டிரஸ்ட் தலைவர் நோவல் டாடாவுடனான கருத்து வேறுபாடுகள், பங்குதாரர்களுடன் ஏற்பட்ட மோதல்களே இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாடா குழுமத்தில் 40 ஆண்டு காலப் பணியை நிறைவு செய்துள்ளேன். மிகவும் மதிப்பிற்குரிய இந்த நிறுவனத்திற்குப் பங்களிக்கும் வகையில் மிகுந்த மனநிறைவு தரும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகவும், ஒரு முக்கியப் பொறுப்பாகவும் இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். தான் நிறுவனத்திடம் பணி நீட்டிப்பு எதுவும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.

வருகிற ஆக. 18 ஆம் தேதி டாடா குழும பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் சந்திரசேகரன் பதவி விலகியுளளார். டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா செய்துள்ளதால் டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா பவர் உள்ளிட்ட டாடா குழுமப் பங்குகள் 3% வரை சரிந்துள்ளன.