#BREAKING | நீட் போராட்டம் - மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து!
Aug 2, 2026, 11:53 IST
நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் கடந்த வாரத்தில் போராட்டம் நடத்திய நிலையில், தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது