☰
×

#BREAKING : பட்டப்பகலில் நீதிமன்றம் முன்பு கொடூர தாக்குதல் — 6 பேர் கும்பல் வெட்டியதில் ஒருவரின் கை துண்டிப்பு..!!

 

புனேவில் உள்ள சிவாஜிநகர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே புதன்கிழமை பிற்பகல் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று இருவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியதில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் மந்தர் கிவாலே என்பவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. குடும்ப நல நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 4-வது நுழைவாயில் அருகே பிற்பகல் 1 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவத்தால் நீதிமன்றத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் இடையே பெரும் பீதி ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சசூன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மந்தர் கிவாலே, சுபம் சவான் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். எனவே, முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் ஆறு பேர் கொண்ட கும்பல், இவர்கள் இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவரது இடது கை மணிக்கட்டுப் பகுதியில் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுயநினைவற்ற நிலையில் கிடந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தாக்குதலை நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், சம்பவ இடத்திலிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், ஒரு மேகசின் மற்றும் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் குழுவினர், அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தடயங்களைச் சேகரித்தனர். இந்தத் தாக்குதலுக்கான பின்னணி, தப்பிச் சென்ற குற்றவாளிகளின் அடையாளம் மற்றும் மந்தர் கிவாலேவைக் குறிவைத்து இந்தக் கொலை முயற்சி நடத்தப்பட்டதா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

पुण्यात कायदा आणि सुव्यवस्थेचा प्रश्न भयानक झालाय.. शिवाजी नगर कोर्टाबाहेरच एकाची कोयत्यानं हल्ला करुन हत्या केली.. आधी गोळीबार केला, ती गोळी लागली नाही म्हणून कोयत्यानं वार करुन हत्या.. कोर्टात इतके पोलीस, वकील असताना गावगुंडांची टोळी किती माजलीये पाहा #Pune #punecourtfiring https://t.co/40euNBLRKj

— Pooja ujagare (@PoojaUjagare) November 25, 2026


 

पुण्यात कायदा आणि सुव्यवस्थेचा प्रश्न भयानक झालाय.. शिवाजी नगर कोर्टाबाहेरच एकाची कोयत्यानं हल्ला करुन हत्या केली.. आधी गोळीबार केला, ती गोळी लागली नाही म्हणून कोयत्यानं वार करुन हत्या.. कोर्टात इतके पोलीस, वकील असताना गावगुंडांची टोळी किती माजलीये पाहा #Pune #punecourtfiring https://t.co/40euNBLRKj

— Pooja ujagare (@PoojaUjagare) November 25, 2026