×

#BREAKING : சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சயனைடு நிரப்பிய இரண்டு ஆர்.டி.எக்ஸ். குண்டுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிக்கும் என தலைமைப் பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டில் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் மிரட்டல் புரளி என தெரியவந்தது.