#BREAKING : கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 39-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்..!
May 20, 2026, 14:27 IST
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை 7 மணிக்கு அலுவலக இ - மெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அரசு அலுவலக ஊழியர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே தலைப்பு அலுவலகத்திற்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் சென்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் மூலம் சோதனை செய்தனர்.
இன்று 39 வது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டலும் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதனால் போலீசார் மற்றும் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். அடிக்கடி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டுமிரட்டல் அனுப்பும் வாலிபர் யார்? என்பதை போலீசார் சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்டுபிடிக்க முடியும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.