#BREAKING : தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!
Sep 19, 2025, 12:46 IST
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை. இரவு நேரத்தில் விஜய் வீட்டிற்குள் புகுந்த நபரால் பரபரப்பு; ஒய் பிரிவு அதிகாரிகள் தகவலின்பேரில் சோதனை
சென்னை நீலாங்கரையில் உள்ள தலைவர் விஜய் வீட்டில் நேற்றிரவு ஒரு இளைஞர் நுழைந்து மொட்டை மாடியில் உட்கார்ந்து இருந்ததை பார்த்து வீட்டு வேலையாட்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள் அந்த இளைஞரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண்(24) என்பதும், நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது.இதையடுத்து அவரை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில்( IMH) நீலாங்கரை போலீசார் சேர்த்தனர்.