#BREAKING : ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை ரூ.10,000 வழங்கப்படும் - பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியானது..!
தமிழகத்தில் பாஜக இன்னமும் தன்னுடைய தேர்தல் அறிக்கை வெளியிடாமல் இருக்கிறது.இது குறித்து பல கட்ட விமர்சனங்கள் எழுந்து வந்த சூழலில் நாளை அதாவது இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், சற்று முன் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியானது. புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026 எனும் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதனை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
- அதில், அனைத்து குடும்பத் தலைமை பெண்களுக்கு மாதம் ரூ.2,000,
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை ரூ.10,000 வழங்கப்படும்.
- ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் (பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி),
- பெண்கள் பாதுகாப்பு – Zero FIR, CCTV கண்காணிப்பு,
- விரைவு நீதிமன்றங்கள் (Fast Track Courts),
- பெண்கள் SHG & MSME ஆதரவு – ரூ.50 லட்சம் வரை வட்டி இல்லா கடன்,
- தைப்பூசம் மாநில விழாவாக அறிவிக்கப்படும்.
திருப்பரங்குன்றத்தில் பழமையான தீபம் ஏற்றும் வழக்கம் மீண்டும் தொடக்கம், போதைப் பொருள் ஒழிப்பு, Ganja இல்லா மாநிலம் இலக்கு, PM-KISANக்கு மாநிலம் கூடுதல் ரூ.3,000 (மொத்தம் ரூ.9,000), சிறு விவசாயிகளுக்கு ரூ.50,000 உதவி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.