#BREAKING : பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்..!
Sep 25, 2025, 14:43 IST
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்.
2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜகவுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக, மக்களவை பாஜக உறுப்பினர் வைஜெயந்த் பண்டா, ஒன்றிய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகிய இருவர் நியமனம் செய்யப்படுவதாக தேசிய பாஜக தலைவர் ஜெ. பி. நட்டா இன்று (செப்.25) அறிவித்துள்ளார்.