#BREAKING : தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்..!!
போரின் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிபொருள் விலை ஏறிவரும் நிலையில், உலக நாடுகள் இந்த நிலைமையை சமாளிக்க, தங்கள் இருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்து வந்தன. இதனால் தங்கம் விலை தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக குறைந்தது. ஆனால், ஈரான் மீது தாக்குவதை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்ததில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
ஆபரண தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 27) கிராமுக்கு ரூ. 80 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 13,430க்கு விற்பனையானது.
வெள்ளி விலையில் நேற்று கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ. 245க்கு விற்பனை.
அந்த வகையில், சென்னையில் இன்று (மார்ச் 28) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.230 அதிகரித்து ரூ.13,660க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,09,280க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.250க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.