☰
×

#BREAKING : ஆசிய விளையாட்டு: இந்திய கிரிக்கெட் அணிக்கு தங்கப்பதக்கம்..!

 

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ன் ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் தங்க பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் (20 ஓவர்) நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறும் இறு திப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புயல் வேகத்தில் ரன் குவித்து அசத்தினார். அவர் 20 பந்துகளில் அரைசதம் அடித்து, 28 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். பவர் பிளேயில் இந்தியா 81/2 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கம் கண்டது. நடுவரிசையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (21) மற்றும் இஷான் கிஷன் (20) ஆகியோர் ஆட்டமிழந்தாலும், கடைசி ஓவர்களில் திலக் வர்மா (51* - 22 பந்துகள்) மற்றும் சிவம் துபே (27 - 15 பந்துகள்) இணைந்து பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 211/6 ரன்கள் குவித்தது.


212 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அழுத்தம் கொடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் பாகிஸ்தான் கேப்டன் சாஹிப்சாதா ஃபர்ஹானை (10) ஆட்டமிழக்கச் செய்ய, அக்சர் படேல் உஸ்மான் கானை (3) வெளியேற்றினார். 6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 39/2 எனத் தள்ளாடியது.

பின்னர் களமிறங்கிய ஹாசன் நவாஸ் தனி ஆளாகப் போராடி 94 ரன்கள் குவித்த போதிலும், இந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை மீறி அணியை வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. இறுதியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்த நிலையில், அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 19 ரன்களுடன் தோல்வியை தழுவியது.


தொடரும் கைகுலுக்காத சர்ச்சை:
போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற டாஸ் நிகழ்வின் போது, வழக்கம்போல இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளாமல் சென்று ஆட்டத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.