#BREAKING : திமுகவில் இணைகிறார் அன்வர் ராஜா..!!
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா திமுகவில் இணைகிறார்.
அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம் பியுமான அன்வர் ராஜா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைகிறார். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அதிருப்தியில் இருந்த அவர், இது குறித்து ஏற்கனவே பேசியிருந்ததும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அன்வர் ராஜா தி.மு.கவில் இணையுள்ளதாக தகவல் வெளியானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை திமுகவில் இணைத்துக் கொள்கிறார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த அன்வர் ராஜா, அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அவர் அண்மையில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த போது, தமிழ்நாட்டில் ஒருபோதும் பாஜக கால் ஊன்ற முடியாது என என தெரிவித்திருந்தார். ஏற்கனவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்த போதும் அக்காட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த அன்வர் ராஜாவின் பேட்டி அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. சி ஏ ஏ சட்ட திருத்தத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தபோதும், நாடாளுமன்றத்தில் எதிர்த்து பேசி இருந்தார் அன்வர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து வெளியேறியவர் இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.