×

#BREAKING தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் மாநிலத்தின் நோய் தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் 12 ஆம் தேதி முதல் வருகின்ற 19ஆம் தேதி வரை காலை 6 மணி வரை தொடர்ந்து தடை
 

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் மாநிலத்தின் நோய் தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் 12 ஆம் தேதி முதல் வருகின்ற 19ஆம் தேதி வரை காலை 6 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வருகிற 12 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.உணவகம், பேக்கரி, தேனீர் கடைகள் இரவு 9 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கூட்டங்கள், பொழுதுபோக்கு கலாசார நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது. தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கான தடை தொடர்கிறது.மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி இல்லை.தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.