×

#BREAKING : அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு!..!!

 

பா.ஜ.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் அண்ணாமலை. அவரது விலகல் கடிதம் ஏற்கப்பட்டதாக பா.ஜ.க தேசியத் தலைமை அறிவித்துள்ளது.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக முடிவு எடுத்தார்.

 

இதையடுத்து, கடந்த 3ம் தேதி டெல்லி சென்று தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

 

ஆனால் மேலிடம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனிடையே அண்ணாமலை புது கட்சி தொடங்குவதாக செய்திகளும் வெளியானது. இந்நிலையில் அண்ணாமலையின் ராஜினாமாவை கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது.