×

#BREAKING : சாதனை படைத்த அண்ணாமலை... அறிவித்த சில நிமிடங்களிலேயே 1,00,000+ பேர் அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தனர்..!

 

பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக 2 நாட்களுக்கு முன் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார் இந்நிலையில் இன்று புதிய இயக்கம் பற்றி அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 

சமூக வலைத்தள நேரலையில் தோன்றி பேசிய அண்ணாமலை, “பாஜகவைப் பொறுத்தவரை இந்த 6 ஆண்டு காலத்தில் எப்போதும் ஒரு விஷயத்தை தமிழ்நாட்டின் அடையாளம், மண், கலாச்சாரத்தை நான் விட்டுக்கொடுத்தது கிடையாது. நான் எப்போதும் பெருமைமிகு இந்தியன், பாரம்பரியமிக்க தமிழன் என சொல்வேன். அப்படித்தான் நான் ஆரம்பிக்ககூடிய இயக்கத்தில் இருக்கப் போகிறேன். நான் பாஜகவில் இணைந்தபோது அத்தனை தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். பாஜக தமிழர் அடையாளத்தோடு களத்தில் இருக்க வேண்டும் என நினைத்தேன். 

கடந்த 18 மாதங்களாக எனக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை அமைதியாக சொல்லி கொண்டு வந்தேன். 2025 டிசம்பர் மாதமே நான் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்து அவர்களை தயார்படுத்தி விட்டேன். என்னுடைய அரசியல் கட்சி தமிழ்நாட்டில் அடுத்து நடைபெறும் பொதுத்தேர்தலில் பங்குபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு முதலமைச்சர், 35 அமைச்சர்கள், 234 எம்.எல்.ஏ.,க்கள், 39 எம்.பி.,க்கள் ஆகியோர் தமிழ்நாட்டை மாற்ற முடியாது. உள்ளாட்சி பதவிகளில் இருப்பவர்கள் மூலம் சுத்தமான தமிழ்நாட்டை கொண்டு வர முடியும். இப்போதைக்கு நாம் தொடங்கும் இயக்கம் விரைவில் கட்சியாக மாறும். 


https://wetheleader.org/ என்ற இணையதளம் வாயிலாக இணையுங்கள். நாம் அரசியலில் வருபவர்களை தேர்தலில் நிற்க தயாராகும் வகையில் அவர்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெறும். நாம் யாருக்கும் போட்டி கிடையாது. ஆளும் கட்சி இருக்கிறது, நிறைய எதிர்க்கட்சிகளும் இருக்கிறது. எல்லாரும் அவர்கள் கொள்கையை சொல்லட்டும். நாமும் வரும் காலத்தில் நம்முடைய கொள்கையை சொல்வோம். விரைவில் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் வரை பொறுமையாக இருங்கள்” என தெரிவித்துள்ளார். 

இது நம்ம இயக்கம் என்ற அமைப்பின் இணைப்பை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் அண்ணாமலை. இதில் தற்போது வரை சுமார்  1,00,000க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.