☰
×

#BREAKING : அன்பில் மகேஷின் நண்பர் முத்துக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கம்..!

 

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, பணம் பெற்று மோசடி செய்தாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தரப்பில் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அன்பில் மகேஷின் நெருங்கிய நண்பரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முத்துக்குமார் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குறிப்பிடப்படுகிறார். அவர் தலைமறைவாக இருந்தார். பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரது வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டதில் பல கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அந்தக் கணக்குகளில் சுமார் நான்கரை கோடி ரூபாய் தொகை முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முத்துக்குமாரின் 29 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.4.5 கோடி முடக்கப்பட்ட நிலையில், அன்பில் மகேஷின் வங்கி கணக்குகளும் ஆராயப்பட்டு வருவதாக தகவல்