#BREAKING : கைது உத்தரவு என்பது வதந்தி; யாரும் நம்ப வேண்டாம் - இயக்குனர் லிங்குசாமி விளக்கம்..!
லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ்யை செக் மோசடி வழக்கில் குற்றவாளி என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
2014-ம் ஆண்டு திருப்பதி ப்ரதர்ஸ் பிலிம் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இயக்குனர் லிங்குசாமி 2016-ம் ஆண்டு ரூ.35 லட்சம் பணத்தை ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றுள்ளார்.
இந்த கடனை லிங்குசாமி திருப்பி செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடனை வட்டியுடன் ரூ.48.68 லட்சத்தை செலுத்துமாறு அந்த நிறுவனத்தில் மேலாளர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு தொடர்ந்து வந்ததது. இந்நிலையில் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ் குற்றவாளி என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் இது குறித்து இயக்குனர் லிங்குசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவித்துள்ளாவது,
“காசோலை வழக்கில் நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளனர். நாங்கள் மேல்முறையீடு செய்ய 30 நாள் கால அவகாசம் வழங்கி உள்ளனர். நாங்கள் இதை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள். எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை” என தெரிவித்துள்ளார்.