#BREAKING : ஏர் இந்தியா விமான விபத்து..! தரையிறங்கும்போது வெடித்து சிதறிய டயர்!
Updated: Mar 11, 2026, 14:07 IST
ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 (VT-BWQ) விமானம், புக்கெட்டில் தரையிறங்கியபோது தான் இந்த சம்பவம் நடந்தது. இதன் காரணமாக விமானத்தின் முன்புற சக்கரம் கழன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் ஓடுதளத்தில் சிக்கியதால், புக்கெட் விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்த விபத்தை பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் இல்லை. இருப்பினும், இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.