×

#BREAKING: அதிமுக EX எம்.பி. பதவி நீக்கம்..!

 
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், செங்கோட்டையன் ஆதரவாளருமான சத்தியபாமா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்யவதாக அறிவித்தார். இந்தநிலையில், முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் பதவியை பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அதிமுக தலைமைச்செயற்குழு பொறுப்பில் இருந்து முன்னாள் எம்.பி. சத்தியபாமா நீக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையன் ஆதரவாளரான சத்தியபாமாவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
சத்தியபாமா திருப்பூர் மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி ஆவார்.