#BREAKING : நடிகர் இம்ரான் கான் அக்.28-க்குள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!
பாலிவுட் பிரபல நடிகர் ஆமிர் கானின் மருமகனும், பிரபல நடிகருமான இம்ரான் கான், வரும் அக்டோபர் 28-ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மும்பை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசியல் போராட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, குடிவரவு சட்டத்தின் கீழ் (Immigration Act) இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 10 அன்று, மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) சார்பில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சீரமைப்பு தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் நடிகர் இம்ரான் கான், தனது காதலி லேகா மற்றும் உறவினர் (சகோதரி/மருமகள்) ஆகியோருடன் கலந்து கொண்டார். அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி, இம்ரான் கான் உட்பட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை மும்பை காவல்துறை கைது செய்து காவலில் எடுத்தது.
இதனிடையே, பாஜக தலைவர் கிரிட் சோமையா இது குறித்துக் கேள்வி எழுப்பினார். அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டுப் பிரஜையான இம்ரான் கான், இந்தியாவில் அரசியல் போராட்டங்களில் எப்படிப் பங்கேற்கலாம் என்றும், அவர் OCI (இந்திய வம்சாவளி வெளிநாட்டு குடியுரிமை) விவாத விதியை மீறியுள்ளதால் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, மும்பை காவல்துறை விசாரணை நடத்தி இம்ரான் கானுக்கு வெளியேற்ற நோட்டீஸ் வழங்கியது.
நடிகர் இம்ரான் கான் அமெரிக்கக் குடியுரிமை (US Citizenship) கொண்டவர்..அவர் இந்தியாவில் தங்குவதற்கும் பயணிப்பதற்கும் OCI (Overseas Citizen of India) அட்டை வைத்திருந்தார்.OCI அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் இந்தியாவில் நீண்ட காலம் தங்கி வாழ உரிமைகள் இருந்தாலும், அவர்கள் நாட்டின் அரசியல் போராட்டங்களிலோ அல்லது அரசியல் நடவடிக்கைகளிலோ ஈடுபட சட்டப்பூர்வ அனுமதி இல்லை.
வெளிநாட்டுப் பிரஜையாக இருந்து கொண்டு இந்தியாவில் அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம், OCI விதிகளையும் குடிவரவு சட்டத்தின் நிபந்தனைகளையும் இம்ரான் கான் மீறியுள்ளதாகக் கூறி, வரும் அக்டோபர் 28-க்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு மும்பை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.