#BREAKING : யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..! தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிறது கால்பந்து உலக கோப்பை..!!
FIFA கால்பந்து உலக கோப்பை தொடரின் நேரலையானது, இந்தியாவில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
வருகிற ஜூன் 11-ந் தேதி முதல் ஜூலை 19-ந் தேதி வரை 23-வது உலகக் கோப்பை கால்பந்து நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில், அடுத்த மாதம் தொடங்க உள்ள கால்பந்து உலக கோப்பை தொடர் இந்திய ஒளிபரப்பு உரிமத்தை எந்த நிறுவனமும் இன்னும் வாங்கவில்லை.
100 மில்லியன் டாலரில் இருந்து 35 மில்லியன் டாலராக பிபா விலையை குறைத்தும், உரிமத்தை யாரும் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவிலும், அதிகாலையிலும் போட்டிகள் நடைபெறும் என்பதால் பார்வையாளர்கள் பெரிதளவில் இருக்கமாட்டார்கள் என நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷனே ஒளிபரப்பு உரிமையை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.