☰
×

#BREAKING : முதல்வர் விஜய் அரசுக்கு விழுந்த பலத்த அடி! வெளிமாநிலங்களுக்குக் கனிமங்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை  நீக்கம்!

 

தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடை ரத்து.

 

தமிழகத்தில் உட்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமான பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், செயற்கை விலையேற்றத்தைத் தடுக்கவும், தமிழ்நாடு சட்ட விரோத கனிமச் சுரங்கம் கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை 9-ம் தேதி திருத்தம் செய்யப்பட்டது.

 

இதன் அடிப்படையில் காரைக்கால், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக்கற்களை கொண்டு செல்ல ஜூலை 27-ம் தேதி முதல் 3 மாதத்துக்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை மேலும் 3 மாதத்துக்கு தமிழக அரசு நீட்டித்தது.

இந்தத் தடையை நீக்கவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கேரள முதலமைச்சர் சதீஷன் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கிடையே, கட்டுமான பொருள்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் இருந்து கருங்கல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கட்டுமான பொருள்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தடை விதிக்க வகைசெய்த தமிழக சட்டவிரோத கனிம போக்குவரத்து திருத்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவை எனவும் தெரிவித்துள்ளது