#BREAKING : கிளாம்பாக்கத்தில் நடந்து சென்ற பயணி மீது மாநகர பேருந்து மோதி விபத்து..!பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணி மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது. அரசுப் பேருந்தின் முன்பக்கம் டயர் ஏறி இறங்கியதில்,பயணி படுகாயம்.
சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெய் ஷங்கர்.இவர் தன் சொந்த ஊரான தென் மாவட்டத்திற்கு செல்ல தாம்பரத்தில் இருந்து கிளம்பாக்கம் வந்துள்ளார். அப்போது அங்க வந்த சென்னை மாநகர பேருந்து நடந்து சென்ற பயணி மீது மோதியது. இதில் அந்த பயணி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அங்க இருந்த பயணிகள் 108 அம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து அவரை கிரோம்பேட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய ஒப்பந்த ஊழியரான கிஷோர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Justin | கிளாம்பாக்கத்தில் நடந்து சென்ற பயணி மீது மாநகர பேருந்து மோதி விபத்து; ஒப்பந்த ஓட்டுநர் கைது!#SunNews | #Kilambakkam | #BusAccident pic.twitter.com/k5WJ0jmFUv
— Sun News (@sunnewstamil) May 29, 2026